Textile Fibers and It's Properties in Tamil / நெசவியல் இழைகள் மற்றும் அதன் பன்புகளும் தமிழில் - Varun..

நெசவியல் இழைகள் ( Textile Fibers) அறிமுகம் நெசவியல் துறையில் துணிதயாரிக்க பயன்படும் எல்லா விதமான நூல்களும் (Yarn) , இழைகளிலிருந்து ( Fibres ) தயாரிக்கப்படுகின்றன. துணி நமது அன்றாடவாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இழைகளின் பண்புகளைப் பொறுத்தே, துணிகளின் பண்புகள் இருக்கும். துணிவகைகளை உபயோகப்படுத்தும் விதம், பயன்படுத்தும் காலம், அதன் உழைக்கும் தன்மை, அணியும் விதம் ஆகியவைஇழைகளின் பண்புகளைப் பொறுத்தே இருக்கும். எனவே , துணியைத் தயாரிக்க மூலப்பொருளாக இருக்கும் இழைகளைப் பற்றி அறிந்துகொள்வது மிக அவசியம். உதாரணமாக, குளிர்கால உடைகளைத் தயாரிக்க, கம்பளி (wool) மற்றும் அக்ரிலிக் இழைகள் (Acrylic fiber)அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த நவீன வளர்ச்சி அடைந்து வரும் நெசவியல் உலகில், புதுவகையான செயற்கை இழைகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன...