Textile Fibers and It's Properties in Tamil / நெசவியல் இழைகள் மற்றும் அதன் பன்புகளும் தமிழில் - Varun..

நெசவியல் இழைகள்

( Textile Fibers) 


அறிமுகம்

            நெசவியல் துறையில் துணிதயாரிக்க பயன்படும்
எல்லா விதமான நூல்களும் (Yarn) , இழைகளிலிருந்து ( Fibres ) தயாரிக்கப்படுகின்றன. துணி நமது அன்றாடவாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 
             
            இழைகளின் பண்புகளைப் பொறுத்தே, துணிகளின் பண்புகள் இருக்கும். துணிவகைகளை உபயோகப்படுத்தும் விதம், 
பயன்படுத்தும் காலம், அதன் உழைக்கும் தன்மை, அணியும் விதம் ஆகியவைஇழைகளின் பண்புகளைப் பொறுத்தே இருக்கும்.

              எனவே , துணியைத் தயாரிக்க மூலப்பொருளாக இருக்கும் இழைகளைப் பற்றி அறிந்துகொள்வது மிக அவசியம். 
உதாரணமாக, குளிர்கால உடைகளைத் தயாரிக்க, கம்பளி (wool) மற்றும் அக்ரிலிக் இழைகள் (Acrylic fiber)அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. 
மேலும் இந்த நவீன வளர்ச்சி அடைந்து வரும் நெசவியல் உலகில், புதுவகையான செயற்கை இழைகள் சந்தையில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு நெசவியல் இழைகள்

நெசவியல் இழைகள்

(Textile Fibre)

                   நெசவியல் இழைகள் (Textile Fibres) என்பது தாவரங்களின் பல்வேறு பகுதியிலிருந்தும்,  விலங்குகளின் முடியிலிருந்தும் , 
தாதுப்பொருள்களிலிருந்தும்
பிரித்தெடுக்கப்படும் மிக நுண்ணிய விட்டம் உள்ள பொருளாகும். 

                    இந்த இழைகள் பல
ஒன்றாக்கப்பட்டு, முறுக்கப்பட்டு நூலாகவும், பல்வேறு பயன்பாடுள்ள துணியாகவும்
மாற்றப்படுகின்றன.

                    ஒரு நெசவியல் இழை (Textile Fibre)  என்பது மிகவும் வளையும்தன்மை
உடையதாகவும் , நுண்ணோக்கியின் ( microscope )
வழியாகக் காணும்போது சீரான தோற்றம் உடையதாகவும், அதன் பருமனைப்போல் பல மடங்கு நீளம் உடையதாகவும், ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் பெற்றிருக்கும்.

நெசவியல் இழைகளுக்குத்
தேவையான முக்கிய பண்புகள் 

( Properties of Textile Fiber) 


               இழைகளின் நூற்புத்திறன் (Spinnabality) அதன் பண்புகளைச் சார்ந்து உள்ளது. மிகச்சிறந்தவகை இழைகள், இருமுக்கிய பண்புகளைப்பெற்றிருக்க வேண்டும். 


அவையாவன:

   அ) அத்தியாவசியப் பண்புகள் (Essential Properties)
  ஆ) விரும்பத்தக்க பண்புகள்             (Desirable Properties)


அ) அத்தியாவசியப் பண்புகள்
(Essential Properties)


1. நீளம் (Length)
2. வலிமை (Strength)
3. வளையும் தன்மை (Flexibility)
4. மெல்லிய தன்மை (Fineness)
5. நூற்புத் திறன் (Spinnability)

1. நீளம் (Length)           

            இழையின் நீளத்தைப் பொறுத்தே, நூலின் நூற்புத்திறன் அமையும். இழைகளை நூலாக
நூற்பதற்கு நீளம் குறைந்தது 
5மி.மீ இருக்க வேண்டும். இழையின் நீளம் அதிகமாக அதிகமாக மெல்லியரக நூல்களை நூற்க முடியும். 1.5" – 2.5" நீளம் உடைய இழைகளிலிருந்து 
100S – 200S நெம்பர் வரை நூலாக நூற்க முடியு


2. வலிமை ( Strength) 

            இழைகளின் வலிமை என்பது, அதன் மீது இயக்கப்படும் விசையை, அறுந்து போகும் வரை தாங்கக்கூடிய உறுதியைக் குறிக்கும். 
            பொதுவாக, உறுதித்தன்மை மற்றும் உழைக்கும் திறன் போன்ற பண்புகள் இழைகளின்
வலிமையைச் சார்ந்திருக்கும்.

3. வளையும் தன்மை (Flexibility)

            இழையின் முறுக்கம்
இழைகளுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை இருந்தால்தான், நூற்பு இயந்திரங்களின் வழியாக எளிதாக அவற்றை செலுத்த முடியும். 
            மேலும், இழைகளை முறுக்கேற்றும் பொழுது, 
வளைந்துமற்றொரு இழையின் மேல் சுற்றினால்தான் ஒழுங்கான மற்றும் சீரான அமைப்புள்ள நூலைப் பெற முடியும். இழைகள்
மிகவிறைப்பாக இருந்தால் கையாள்வது கடினம்

4. மெல்லிய தன்மை (Fineness)

             இழைகளின் பருமன் (Thickness), விட்டம் (Diameter), மற்றும் அடர்த்தி (Density) இவற்றுக்கு இடையே உள்ள
தொடர்பே இழையின் மெல்லிய தன்மை ஆகும். 
             இயற்கையில் கிடைக்கும் இழைகளில் மெல்லிய தன்மையில் வேறுபாடுகள் அதிகம் இருக்கும். செயற்கை இழைகள் ஒரே சீராக
இருக்கும்.


5. நூற்புத் திறன் (Spinnability)    

              இழைகளின் நூற்புத்திறன் அதன் இயற்பண்புகளைப் பொறுத்து அமைகின்றன. 
அந்த பண்புகள், இழைகளை நூலாக மாற்றுவதற்குத் துணை புரிவதாக இருக்க வேண்டும்.            மேலும், இழைகளை
முறுக்கேற்றும்போது, அவை ஒன்றுடன் ஒன்று நேர்த்தியாக இணைந்து, சீரான
அ மைப்புள்ள நூலை உருவாக்க
வேண்டும். 
               இழைகள் ஒன்றுடன் ஒன்று
சரியாக இணையாகாமல் இருந்தால் , முறுக்கேற்றும்போது ஒன்றுடன் ஒன்று
சேராமல் விலகிச் செல்லும். இதன் காரணமாக நூலின் சீர்தன்மை, வலிமை மற்றும் தரம் பாதிக்கப்படுகிறது.


ஆ) விரும்பத்தக்க பண்புகள்
(Desirable Properties)

1. சீர் தன்மை (Uniformity) 
2. நீரை உறிஞ்சும் தன்மை.         (Absorbency)
3. நீள் மீட்சித் தன்மை (Elasticity)
4. நீண்ட உழைப்புத் தன்மை (Durability)
5. இயற்கை பளபளப்பு ( Natural  Lustre)
6. அதிக அளவில் கிடைத்தல் ( More Availability)

1. சீர் தன்மை (Uniformity or Evenness)

        இழைகளின் வளர்ச்சி
நெசவியல் இழைகளின் நீளம் மற்றும் பருமன் இவைகளின் சீர் தன்மையைக் கொண்டே தரம்
(Quality) நிர்ணயிக்கப்படுகிறது. பருத்தி, கம்பளி போன்ற இயற்கை இழைகளின் சீர் தன்மை குறைவு என்றாலும், செயற்கை இழைகளின் நீளம் மற்றும் பருமன் ஒரே சீர் தன்மை கொண்டவை.


2. நீரை உறிஞ்சும் தன்மை (Absorbency)

           நெசவியல் இழைகள் நூலாக நூற்கப்பட்டு, துணியாக நெய்யப்படுவதற்கு முன்னர் அல்லது பின்னர், சாயமிடுதல் மற்றும் அச்சிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்படுவதால், 
நீர் உறிஞ்சும் தன்மை அவசியமாகிறது. 
            நீர் உறிஞ்சும் தன்மை என்பது ஒவ்வொரு நெசவியல்
இழைக்கும் மாறுபடும். உதாரணமாக, பருத்தி
இழையின் நீர் உறிஞ்சும் அளவு 8.5%, ரேயான் (Rayon) இழையின் நீர் உறிஞ்சும் அளவு 13% மற்றும்
பாலியெஸ்டர் (Polyester) இழையின் நீர் உறிஞ்சும் அளவு
4% ஆகும்.


3. நீள் மீட்சித் தன்மை (Elasticity) 

             நீளும் போது இழையின்
மாற்றம் இயற்கையிலேயே, நெசவியல் இழைகளுக்கு
நீள் மீட்சித் (Elasticity Regain) தன்மை உண்டு. 
             நீள் மீட்சித் தன்மை என்பது இழையின் மீது ஒரு விசை
இயக்கப்பட்டாலோ அல்லது இறுக்கப்பட்டாலோ மீண்டும் பழைய நிலைக்கு வரும்
தன்மை ஆகும்.


4. நீண்ட நாள் உழைப்புத் தன்மை
(Durability) 

              நெசவியல் இழைகள் நூலாக நூற்கப்படும் பொழுதும், துணியாக நெய்யப்படும் பொழுதும்,  துணிகள் சாயமிடும் பொழுதும் பல விதமான
வினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே நீண்ட நாள் உழைக்கும் தன்மை அவசியமாகிறது.


5. இயற்கை பளபளப்பு (Natural Lustre)

                இயற்கையிலேயே இழைகளுக்கு பளபளப்பு
உண்டு. மேலும், மெர்சரைசேஷன் (Mercerization) போன்ற செயல்களினாலும் பளபளப்புத் தன்மையை அதிகப்படுத்த முடியும். இத்தன்மையினால் இழைகளின் மதிப்பு கூடுகிறது.


6. அதிக அளவில் கிடைத்தல்
(More availability)

              நெசவியல் இழைகள் பெருமளவு கிடைப்பதனாலும் , விலை மலிவாக
கிடைப்பதானாலும் அவற்றின் பயன்கள் மாறுபடுகின்றன.

 நெசவியல் இழை வகைகள்

               நெசவியல் இழை, இரு பெரும் பிரிவுகளாக
பிரிக்கப்படுகிறது. 

அவை,

1) இயற்கை இழைகள்;
2) செயற்கை இழைகள்

                     
                                               by  -- Varun

Comments

Post a Comment

Popular posts from this blog

Introduction to Textile and History of Textile